கடந்த 24 மணி நேரத்தில் 175 பலி! இத்தாலியின் பரிதாபம்!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 175 என அறிவிக்கப்பட்டுள்ளது


கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 175 பேர் பலியாகி உள்ளனர். 3,000-க்கும் அதிகமானவர்கள்கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,266 இருந்து 1,441 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றுநோய்க்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,660 இருந்து 21,157 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி முழுவதும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் அவசர தேவை தவிர பிற காரணங்களுக்காக தாங்கள் வசிக்கும் இடங்களை விட்டு மற்ற இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments