கனடா துப்பாக்கி சூட்டில் வடமராட்சி பெண் மரணம்?


கனடா ஒண்டாரியோ மாகாணத்திலுள்ள அஜின்கோட பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.முன்னதாக காயமடைந்த இருரும் வைத்திய சாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக காவத்துறை தெரிவித்தது.

இன்று காலை 10 மணியளவில் பிறேம்ப்ளே மற்றும் செப்பர்ட் சந்திப்புக்கு அன்மித்த முராய் பகுதியிலிருந்து காவல்துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து; சம்பவ இடத்தில் இரு பெண்கள் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டிருந்தனர்.

காயமடைந்த ஒருவர் வைத்திய சாலையில் சிகிக்சை பெற்று வருவதாகும் மற்றைய பெண்  வடமராட்சி  கொற்றவத்தையை  பிறப்பிடமாக கொண்ட 38 வயதுடைய தீபா சீவரத்தினம் வைத்திய சாலையில் சிகிக்சை பயனளிக்காமல் மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் இச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகின்ற சந்தேக நபர் பற்றிய தகவலை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர் 5 அடி 10 அங்குலம் உயரத்தை உடைய கருப்பு நிறத்தவர் என்றும் அவர் வெளிர் நிறத்திலான காற்சட்டையும் கரிய நிறத்திலான மேலாங்கியையும் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது .

No comments