வாகனங்களிற்கு கிருமி நீக்கல் ?வடக்கில் கொரோனா வைரஸ் ஒழிப்பு தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் சேவையாற்றும் பொது மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்கள் கிருமி நீக்கல் செயல் திட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் பி எஸ் எம் சார்ல்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

பொது மற்றும் தனியார் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் உரிமையாளர்களுக்கு இதனை உரியமுறையில் நடைமுறைபடுத்துமாறும் சுகாதார திணைக்களம் மற்றும் இந் நடவடிக்கைக்கென விசேடமாக அதிகாரமளிக்கப்பட்டவர்களும் இதனை உரிய முறையில் பொறுப்போடு செயற்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் வருகைதருபவர்கள் தொடர்பிலும் கண்காணித்து உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

No comments