ஏன் மௌனம் காக்கிறது சுகாதாரதுறை?

சர்ச்சைக்குரிய வகையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் அரியாலை தேவாலய விவகார மக்களை வைத்திய
சிகிச்சைகளிற்கோ அல்லது தனிமைப்படுத்தலிற்கோ சுகாதார அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்திராமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக பாஸ்டரினை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி திரிந்த பொதுமகன் ஒருவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள போதும் அவரை வைத்தியசாலைக்கு ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் மறுத்துள்ளனர். அவரை வீட்டில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.

குறித்த பாஸ்டர் பயணித்த இடங்கள் மற்றும் கூட பயணித்தோர் தொடர்பில் மக்கள் தகவல்களை வெளியிட்டு வருகின்ற போதும் வைத்தியர்கள் அதனை மூடி மறைத்து நிறுவ முற்படுகின்றமை சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது. 

இதனிடையே அரியாலை சம்பவத்துடன் தொடர்புடைய  மூவருக்கான பரிசோதனை முடிவுகள் வந்தன.மூவருக்கும் தொற்று ஏதும் இல்லை. ஆகவே மூவரும் இன்று மாலை வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்கள் அவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் நாளை வந்து விடும்.

தற்போது தங்கியிருக்கும் மூவரில் ஒருவர் மாத்திரம் குறிப்பிட்ட மதகுருவோடு கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். இப்போது அவருக்கு இருமல் காய்ச்சல் என்பன காணப்படுகின்றது . அவருக்கும் பரிசோதனை முடிவு தொற்று இல்லை என்பதாகவே இருக்கும் என நம்புகின்றேன என சத்தியமூர்த்தி விளக்கமளித்துள்ளார்.

No comments