எதையும் அரசு தான் தீர்மானிக்கு; ஜனாதிபதி ஊடகம் எச்சரிக்கை

பிரதேசங்களை தனிமைப்படுத்துதல், பிரதேசவாரியாக ஊரடங்கு சட்டத்தை அமுலாக்குதல் போன்ற தீர்மானங்களை அரச உயர்மட்டமே மேற்கொள்ளும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி பிராந்திய ரீதியாக, மக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் யாரும் தீர்மானிக்க முடியாது.

ஏதேனும் ஒரு பிரதேசத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டத்தில் மாற்றம் செய்ய தேவையான தகவல்கள் இருப்பின் அது தொடர்பான அனைத்து தகவல்களையும் கொரோனா வைரஸ் ஒழிப்பு செயலணிக்கு அனுப்பி வைக்க வேண்டும் - என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு கூறியுள்ளது.

No comments