தமிழில் அறிவுறுத்திய கோத்தாபய

இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (16) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது ட்டுவிட்டரில் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அதில்,

இன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயவு செய்து வீட்டிலேயே இருங்கள். பொது போக்குவரத்தை பயன்படுத்தவோ, பொது இடங்களில் கூடவோ வேண்டாம்.

கட்டாய தேவைக்கு ஒருவர் மட்டும் வெளியே சென்று, வீட்டிற்குள் நுழைவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவுங்கள். உங்களையும் ஏனையோரையும் பாதுகாக்கவும் - என்றுள்ளார்.

No comments