கொரோனா வைரல் நெருக்கடி! ஐரோப்பிய ஒன்றியம் எல்லைகளை மூடியது!

கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடியை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் தங்களது எல்லைகளை 30 நாட்களுக்கு மூடியுள்ளது.
இத்தடை அமுலுக்கு வருவதால் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 26 நாடுகளும் தங்களது எல்லைகளை மூடுகின்றனர். குறிப்பாக பயணிகள் எவரும் அவரவர் நாட்டை விட்டு வெளியேறவும், உள்ளே நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தடை ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்துக்கும் பொருந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியா ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்துவெளியேறியதால் இத்தடை அவர்களுக்குப் பொருந்தாது.

ஆனால் உணவுப் பொருட்களை விநிநோகம் செய்யும்  பாரவூர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத்தாலி மற்றும் ஸ்பெயினில் மரணங்கள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்த தடை கொண்டுவரப்பட்டுள்ளது.

உலகளவில் 7,500 பேரைக் கொன்ற  வைரசால், ஐரோப்பாவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் 185,000 க்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments