ஈரோஸ் உள் முரண்பாடுகளை ஆராய அழைப்பு?


ஈரோஸ் கட்சியினது உள்ளக முரண்பாடுகளை ஆராய தேர்தல் ஆணைக்குழு தலையிட்டுள்ளது.

அவ்வகையில் அரசியல் கட்சிகள் ஆறின் தலைவர்களும் அதன் செயலாளர்களும் இன்று (10) தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் உள்ளக நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதனை, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழவர் ஜனநாயக முன்னணி, லங்கா மகாஜன சபா, லிபரல் கட்சி, சிறீ லங்கா முற்போக்கு முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் செயலாளர்களுமே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

No comments