தந்தையும் மகனும் ஒப்பமிட்டனர்?


நாடாளுமன்ற தேர்தலிற்கு மகிந்த குடும்பம் மும்முரமாக தயாராகிவருகின்றது.

அவ்வiயில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச, குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். இதன்கான வேட்புமனுவில் அவர் இன்று மதியம் கையெழுத்திட்டுள்ளார்.வழமையாக அவர், தனது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் போட்டியிட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அவரது மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவும் தனது மனைவி மற்றும் சகோதர்கள் சகிதம் வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

இதனிடையே மகிந்த ஒப்பமிடும் நிகழ்வி;ல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியும் பவ்வியமாக கலந்து கொண்டார்.

No comments