முக்கிய தலைகளை தீர்மானிக்கிறது வன்னி?


வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் மனுக்களில் முன்னாள் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனை உள்ளடங்;கிய சுயேற்சைக்குழுவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.மொத்தமாக 6 சுயேற்சைக்குழுக்களதும் சிங்கள வேட்பாளரை உள்ளடக்கிய இரண்டு கட்சிகளினதும் வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை உள்ளடக்கிய சுயேட்சைக் குழுவின் தலைமை வேட்பாளரது ஒப்பமின்மையாலேயே  தெரிவத்தாட்சி அலுவலரால்; நிராகரிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (வியாழக்கிழமை) 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான கட்சிப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது, வன்னி தேர்தல் தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல்செய்த 34 சுயேட்சைக் குழுக்களில் 6 சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுவும் பெரும்பான்மையினத்தவர்களை உள்ளடக்கிய இரு அரசியல் கட்சிகளின் வேட்புமனுவும் மனுவில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களாக செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, வினோநோகராதலிங்கம், ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், க.சிவலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னனி; சி.கஜேந்திரகுமார், சு.தவபாலசிங்கம், த.தமிழகன், த.நிரஞ்சன், க.அழகேந்திரன்,செ.திலகநாதன், மேரிறெஜீனா சஜீந்திரசிங்கம், அந்தோணி அமிர்தநாதன் தற்குரூஸ், செ.சிறீரங்கநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் சிவசக்தி ஆனந்தன், தில்லையம்பலம் கெங்காதரன், லூட்ஸ் மாலினி வெளிற்றன், வடிவேலு இராசரட்ணம், பஞ்சாட்சரம் உமாபதி, ஞானசீலன் குணசீலன், சின்னத்தம்பி இராசன், கோபாலசாமி சற்குணநாதன், பர்னாந்து ஜீவநாயகம் சதானந்தம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

No comments