மங்களம் உண்டாகட்டும்:தேரர் மனு தாக்கல்


எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்புமனுத் தாக்கல் இன்று (12) ஆரம்பமானது.
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்கான முதலாவது வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு முதலாவது வேட்பு மனுவினை ஜனசெத பெரமுன சார்பில் பத்தரமுல்ல சீல ரத்தின தேரர் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.
இன்று முதல் 19ஆம் திகதி வரை வேட்புமனுத்தாக்கல் ஏற்றுக்கொள்ளப்பட உள்ள நிலையில் யாழ். மாவட்ட செயலகத்தில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments