தந்தை செல்வாவிடம் நீதி கேட்கும் தமிழரசு மகளிர்?


தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளராக கட்சி சாராத இறக்குமதிகளிற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றமைக்கு கண்டனம் தெரிவித்து தமிழரசுக்கட்சி மகளிரணி போராட்டகளமிறங்குகின்றது.
இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா நினைவு தூபி முன்னதாக மகளிரணி பிரமுகரான மிதிலா தனது சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
இதனிடையே யாழ்.வேட்பாளர் பட்டியலில் உள்ளடங்கியுள்ள அம்பிகாவை எவ்வாறேனும் கொண்டுவந்துவிட சுமந்திரன் பாடுபடும் நிலையில் தந்தை செல்வா தூபி முன்னதாக போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாடாளுமன்றத் தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.   
அந்த வகையில், வன்னித் தேர்தல் மாவட்டத்தை உள்ளடக்கிய வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவப்பிரகாசம் சிவமோகன், சாந்தி ஸ்ரீகந்தராசா, பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோரும் தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதராதலிங்கம், செந்தில்நாதன் மயூரன் ஆகியோரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சார்பில் கந்தர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், கந்தையா சிவலிங்கம் ஆகியோரும் போட்டியிடவுள்ளனரென அறியமுடிகிறது.
டெலோவில் போட்டியிடும் மூன்றாவது வேட்பாளர் இதுவரை தேர்வுசெய்யபடாத நிலையிலேயே, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செந்தில்நாதன் மயூரனை வேட்பாளராக நியமிக்க கட்சித் தலைமைக் குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments