யாழில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - அராலி வீதியில் மதகு கட்டுவதற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் விழுந்து 25 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார்.

நேற்று (15) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், அராலியை சேர்த்த சூரியகுமார் கீர்த்தனன் (வயது-25) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

யாழ் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்யும் குறித்த இளைஞன் நேற்றிரவு பணி முடித்து வீடு திரும்பும்போதே, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

No comments