வடக்கின் ஊரடங்கை நீடித்தது அரசு

நாட்டில் இப்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் வடக்கு மாகாணத்தில் 24ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் 24ம் திகதி காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு மதியம் 2 மணிக்கு மீள அமுலாகவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பாஸ்டர் ஒருவரை சந்தித்த நபருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments