இலங்கையில் 50 பேருக்கு கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

இன்று (18) புதிதாக 8 பேர் அடையாளம் காணப்பட்டதால் இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் (17) கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை தவறுதலாக அதிகரித்து கணக்கிடப்பட்டது என்று சுகாதார பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் 15 பேர் அடையாளம் காணப்பட்டனர் என்றும், வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44 (குணமடைந்த சீன பெண் உட்பட) எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments