34 பேருக்கு கொரோனா உறுதியானது

இலங்கையில் மேலும் அறுவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (17) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இதுவரை 34 பேர் கொரோனா தொற்றாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று கண்டறியப்பட்டவர்கள் விபரம்,

- 2வது கொரோனா தொற்றாளியான சுற்றுலா வழிகாட்டியின் மனைவி.

- ஜேர்மனுக்கு பயணித்த கொரோனா தொற்றாளிகள் இருவருடன் பயணித்த நபர்.

- லண்டனில் இருந்து மட்டக்களப்புக்கு நாடு திரும்பிய ஒருவர்.

- களனியை சேர்ந்த ஒருவர்.

- மாரவிலயை சேர்ந்த ஒருவர்.

- கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 25 வயது இளைஞன்.

No comments