யாழில் தேடப்பட்ட திருடன் கைது?

யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற  கொள்ளைகள் மற்றும் தொலைபேசி திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்  என்ற சந்தேகத்தில் கிளிநொச்சி இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் இன்று (08) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்

24 வயதுடைய குறித்த இளைஞர் கிளிநொச்சியை வசிப்பிடமாகக் கொண்டவர் எனத் தெரிய வந்துள்ளது.

யாழப்பாணத்தில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் யாழ் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை யாழ். பொம்மை வெளிப் பகுதியில் வைத்து யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இவரிடமிருந்து 5 கைத்தொலைபேசிகள் மற்றும் தங்கச் சங்கிலிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments