தேசியக்கூட்டணி இலக்கா?


தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் சுவரொட்டிகள் உடன் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் கோப்பாய் பொலிஸாரால் இன்று (15) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோண்டாவில் உப்புமடம் சந்திப் பகுதியில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த போது அவ்வழியே வந்த பொலிஸார் அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டி ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் தற்போது பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

No comments