தேவையின்றி நடமாடிய 25 பேர் யாழில் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறி குற்றச்சாட்டில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

காரணங்கள் எவையுமின்றி வீதிகளில் நடமாடிய போது 25 பேரும் கைது செய்யப்பட்டனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயணித்த வாகனங்களும் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

No comments