ஊரடங்கு சட்டம் இறுகுகின்றது?


இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் இதுவரை அதனை
மீறியதாக இதுவரை 4ஆயிரத்து 217 கைதாகியுள்ளனர்.இன்று மட்டும் 199பேர் கைதாகியுள்ளனர்.

இதனிடையே இன்று முதல் ஊரடங்கு சட்டத்தை மீறுபவருக்கு காவல்துறையால்; பிணை வழங்கப்படாது என இலங்கை காவல்துறை அதிபர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை கடுமையாக கடைப்பிடிக்கப்போவதாக அறிவித்துள்ள அதேவேளை எவரையும் வெளியே வரவேண்டாமெனவும் அத்தியாவசியப்பொருட்கள் வீடு வீடாக விநியோகிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பலசரக்கு உதவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்கலாமென அரசு அறிவித்த நிலையில் யாழில் திறக்கப்பட்ட கடைகள் இழுத்து மூடப்பட்டுள்ளது.

மானிப்பாயில் கடைகளை திறந்த பத்து வர்த்தகர்கள் கைதாகியுள்ளனர்.

அரசினது புதிய அறிவிப்பின் பிரகாரம் திறக்கலாமென அறிவிக்கப்பட்ட அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட தாவடி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மருந்து விசிறல் பணி நாளை பருத்தித்துறையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பிலிருந்து வருகை தந்த காவல்துறை அணியொன்று இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

No comments