உறுதியானது பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு கொரோனா தொற்று!!

பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேநேரம் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று குறித்த அறிகுறிகள் சிறிதளவு தென்பட்டது என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவிந்துள்ளார்.

இதனால் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார் பொறிஸ் ஜோன்சன். அத்துடன் காணொளி காட்சி சந்திப்புகள் மூலம் அரசு நடவடிக்கைகளுக்கு தலைமை ஏற்பேன் என்றும் அவர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.


No comments