இன்றும் மத போதனை:10பேர் கைது?


ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 10 இற்கும் மேற்பட்டோர் வவுனியா செட்டிகுளத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 20 இற்கும் மேற்பட்டவர்கள் ஒரு வீட்டில் கிறிஸ்தவ மத போதகர் ஒருவரின் தலைமையில் ஒன்று கூடி மத நடவடிக்கையில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்தப்பகுதி மக்களால் காவல் துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற காவல்துறையினர் மத போதகர் உள்ளிட்ட 10 இற்கும் மேற்பட்டோரை கைது செய்திருப்பதாக அறிய முடிகிறது.

மேற்படி சம்பவம் வவுனியா செட்டிகுளம் முதலியார் குளம் ஐந்தாம் ஒழுங்கையில் இடம்பெற்றுள்ளது.

No comments