அம்பிகாவின் இடத்துக்கு ஆனோல்ட்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மானிப்பாய் தொகுதி வேட்பாரளாக நிறுத்தப்பட்ட முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதனுக்கு பதிலாக யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

அம்பிகாவின் நியமனம் குறித்து பல்வேறு எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்த நிலையிலேயே வேட்பாளர் தெரிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை அம்பிகா சற்குணநாதன் தேசியப் பட்டியலில் இடமளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments