வடக்கில் எந்த தட்டுப்பாடும் இலலை - ஆளுநர்

வடக்கில் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை வீணான குழப்பங்கள் வேண்டாம் என்று வடமாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆளுநரின் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில்,

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள முன் ஆயத்த நடவடிக்கைகளையிட்டு வடமாகாணத்தின் பல மாவட்டங்களில் உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது என்ற வதந்தியினால் அச்சத்தில் மக்கள் மேற்குறித்த பொருட்களை கொள்வனவு செய்வதில் சிரமங்களுடன் முண்டியடிப்பதாகவும் ஆளுநருடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இது வரையிலும் இவற்றுக்கான எந்தவித தட்டுப்பாடும் வடமாகாணத்தில் இல்லை என்பதை தெரிவிப்பதோடு மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் அவசியம் ஏற்படின் கொழும்பிலிருந்து விரைவாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

No comments