நாளை 6 மணி நேர தளர்வு?

வடக்கு உட்பட ஏனைய மாவட்டங்களில் ஊடரங்குத் தளர்வு மற்றும் பயண நடைமுறை தொடர்பான அறிவித்தல்:


வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் மற்றும், கொழும்பு கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் -

நாளை செவ்வாய் காலை 6:00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு, மீண்டும் நாளை மதியம் 12:00 மணி முதல் 27ஆம் திகதி, வெள்ளி, காலை 6:00 மணிவரை நடைமுறைப்படுத்தப்படும்.

ஏனைய மாவட்டங்களில் -இன்று திங்கள் பிற்பகல் 2:00 மணிக்கு நடைமுறைக்கு வரும் ஊரடங்குச் சட்டம் - வியாழன், 26ஆம் திகதி, காலை 6:00 மணிக்கு நீக்கப்பட்டு, அதே நாள், மதியம் 12:00 மணிக்கு மீண்டும் நடைமுறைக்கு வரும்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு இடையேயும் பயணங்கள் மேற்கொள்வது எந்த நேரத்திலும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் - வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளை இடத்திற்கு இடம் அழைத்துச் செல்வதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் காலப்பகுதியில் - எந்த மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளைக் கொண்டுசெல்வதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

விவசாய மற்றும் வர்த்தகத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் இந்த பணிகளை முறையாக நிர்வகிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

No comments