பொலிஸிற்கு எதிராக நடவடிக்கை தேவை!


கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் யாழ்ப்பாணம் பொலிஸ் உயரதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டமைக்கு
எதிராக ஜனாதிபதி செயலகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர், இலங்கை வைத்தியர்கள் சங்கம் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலரும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

சுவிஸில் இருந்துவந்து அரியாலையில் எழுப்புதல் கூட்டம் நடத்திய மத போதகர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதால் அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை சிகிச்சைக்கும் கண்காணிப்பிற்கும் உட்படுத்தவேண்டும் எனக் கூறிய கேதீஸ்வரன் செயலிலும் இறங்கியிருந்தார்.

ஆனால், குறித்த போதகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டமை உறுதிசெய்யப்படவில்லை எனக் கூறிய யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, அதற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டுவந்தார்.

இந்நிலையில், வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் உயர் பொலிஸ் அதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டார் எனக் கூறப்படுகின்றது. இவரை அச்சுறுத்திய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

No comments