இணைந்து பணியாற்ற சந்திப்பு?


கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. கொரோனா COVID- 19  சம்பந்தமான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. 

உலகளாவிய பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து இலங்கைத் தீவினுள்ளும் அடியெடுத்து வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தமிழர் தாயகத்திற்குள்ளும் பரவியுள்ள நிலையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மற்றும் பொது வைத்திய நிபுணர் மருத்துவர் சிவன்சுதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது 

மேற்படி கலந்துரையாடலில் வைத்தியசாலையின் கொரோனா தொற்று விசேட செயலணி உறுப்பினர்கள் மேலதிக அரசாங்க அதிபர்  ஆளுநரின் செயலாளர் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமுதாய மருத்துவ நிபுணர் சுகாதார வைத்திய அதிகாரிகள் பாதுகாப்பு படையினரையும் சந்தித்து அவற்றை தடுப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக இந்த நோய்க்கான சிகிச்சை வசதிகளை மேம்படுத்தல் மற்றும் இந்த நோயை முற்றாக இல்லாதொழித்தல் சம்பந்தமாக  விசேட தீர்மானங்களும் இக்கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா வைரஸை இல்லாதொழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments