யாழில் அரச அதிகார பெருந்தலைகளை காணவில்லையாம்?


வடக்கை கொரோனா ஆட்டிப்படைக்க தொடங்கியுள்ள நிலையில் ஆளுநர் உள்ளிட்ட பலர் வடக்கில் இல்லாதுள்ளதுடன் மற்றும் பல அதிகாரிகள் முடங்கியுள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

இதனிடையே வடக்கு ஆளுநர் பொறுத்த நேரத்தில் இல்லாமல் போயிருந்தமை தொடர்பில் எழுந்த விமர்சனங்களையடுத்து இன்று காலை அவர் யாழ்.திரும்பியுள்ளார்.

இதனிடையே யாழ்.மாவட்ட செயலரும் தற்போது யாழில் இல்லாதுள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே நேற்றைய தினம் சுகாதார சேவைகள் திணைக்கள வடமாகாண தலைமையகத்தில் நடத்தப்பட்ட கொரோனோ தொற்று தொடரபான அவசர கூட்டத்தில் வடமாகாண ஆளுநர்,ஆளுநரது செயலாளர் பங்கெடுக்காமை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார்.

எனினும் பின்னராக வருகை தந்திருந்த சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் சகிதம் கூட்டம் நடந்திருந்தது.
இதனிடையே  மக்களது உயிரோடு விளையாடும் மருத்துவத்தை மூடிய அறைக்களினுள் இரகசிய கூட்டமாக நடத்த அதிகாரிகள் முற்படுகின்றமை கேள்விகளிற்குள்ளாக்கியுள்ளது. 

No comments