170 பேர் தனிமைப்படுத்தலை தவிர்த்தனர்?

இத்தாலி மற்றும் தென் கொரியாவில் இருந்து வந்த 170 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை தவிர்த்துள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை ஐரோப்பா, ஈரான் மற்றும் தென் கொரியாவில் இருத்து மார்ச் 1-15 வரையான காலப் பகுதியில் நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படாமல் இருப்பவர்களை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறும்,

அவர்கள் தத்தமது வீடுகளில் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

No comments