1000 ரூபாய் திருகுதாளம்?

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் மார்ச் மாதத்திற்கான 1000 ரூபாய் சம்பளத்தை ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வழங்க முடியும் என பெருத்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (05) முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பான பெருந்தோட்ட நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறோம். அது வெற்றயளித்தால் சம்பள உயர்வு வழங்கப்படும்.

இதற்கமைய, மார்ச் மாதத்திற்கான சம்மளத்தை ஏப்ரல் மாத முதல் வாரத்தில் வழங்க முடியும் - என்றார்.

இதேவேளை மார்ச் முதல் 1000 ரூபாய் வழங்குவது உறுதி என்று அண்மையில் நாடாளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments