தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம்?
கோத்தா மற்றும் அவரது சகபாடிகள் தமது தலைகளின் மேல் தொங்கிக்கொண்டிருக்கின்ற கத்திகளிலிருந்து தப்பித்துக்கொள்ள பலத்த பிரயத்தனத்திpனை மேற்கொண்டே வருகின்றனர்.
இதன் இன்னொரு கட்டமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/ 1 தீர்மானத்தில் இருந்து விலகும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கு கடந்த அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது.
இந்த நிலையில், இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளது.
இதனை கருத்திற்கொண்டு குறித்த தீர்மானத்தில் இருந்து விலக அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Post a Comment