பகிடிவதை:விசாரணை அதிகாரிக்கு மிரட்டல்!


யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பகிடிவதை தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரி மாணவ ஒன்றிய பிரதிநிதியால் மிரட்டப்பட்டமை சர்;ச்சைகளினை தோற்றுவித்துள்ளது.

புகிடிவதை காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கலைப்பீட புதுமுக மாணவன் ஒருவன் தவறான முடிவு எடுத்து உயிரிழிக்க முயற்சித்த நிலையில் அதிகாரிகளின் தலையீட்டால் மாணவன் காப்பாற்றப்பட்டான்.

பகிடிவதையில் ஈடுபட்ட கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் மாணவனிடம் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிஇ மாணவனால் மிரட்டப்பட்டதையடுத்து அவர் பதவி விலகல் கடிதத்தை யாழ். பல்கலையின் தகுதி வாய்ந்த அதிகாரியிடம் கையளித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கலைப்பீட புதுமாணவனை மூத்த மாணவர்கள் பகிடிவதைக்கு உட்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த புதுமுக மாணவன் தான் உயிரிழக்கப் போவதாக சக மாணவர்களிடம் நேற்றுமுன்தினம் கூறியுள்ளான. சக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

பகிடிவதையில் ஈடுபட்ட மாணவன் விசாரணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டார். விசாரணையின் போது பிரதான முறைப்பாட்டு அதிகாரியை மிரட்டும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.

கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் மாணவனின் அதட்டலையடுத்து தான் பதவியிலிருந்து விலகுவதாக புறொக்டர்இ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரிக்கு நேற்றுமுன்தினம் மாலையே கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து நேற்று மாலை மிரட்டிய மாணவனை அழைத்து மன்னிப்புக் கோருமாறு தகுதி வாய்ந்த அதிகாரி கோரினார். மாணவன் மன்னிப்புக் கோரியதையடுத்து அவா தனது பதவி விலகல் கடிதத்தை மீளப் பெற்றுள்ளார். 

No comments