பிச்சையெடுக்கும் மகிந்த: வெட்கமென்கிறது ஜதேக?


பிரதமர் கோட்டாபய ராஜபக்சவைப் போல 14 பேரை தான மகிந்ததவும் அழைத்துச் சென்றார் என்று பேசப்பட்டது. இருப்பினும் 74 பேரை மகிந்த தன்னுடன் இந்தியாவிற்கு அழைத்துச் சென்றார் என்பதுதான் உண்மை.

இதனிடையே இந்தியாவிடம் கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச கால அவகாசம் கோரிய செயற்பாட்டால் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலிட அச்சம் கொள்வார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சமன் ரத்னப்பிரிய, கோட்டாபய- மஹிந்த அரசாங்கத்தால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்

அண்மையில் இந்தியா சென்றிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, மூவாயிரத்து 200 கோடி ரூபா கடனைப் பெறுவதற்கான பேச்சுகளை அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்தியிருந்தார்.

நாட்டின் பொருளாதார நிலைமை மந்தகதியில் இருப்பதால் கடனைச் செலுத்துவதற்கு இரண்டு வருடகால அவகாசத்தையும் பெறுவதற்கான கோரிக்கையை பிரதமர் மஹிந்த இந்த சந்திப்பின்போது முன்வைத்திருந்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இந்தக் கோரிக்கை குறித்து தென்னிலங்கை அரசியல் களத்தில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை வெளியிட்டு இருக்கின்றனர். 

எனினும், நாடு தற்போது பொருளாதார நிலைமையில் நெருக்கடியை சந்தித்திருப்பதால் பிரதமர் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார் என்பதை பொதுஜன முன்னணியினரும் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு கருத்து வெளியிட்டிருந்தனர்.

ரணில்-மைத்திரி தலைமையிலான கடந்த அரசாங்கம் செலுத்த வேண்டியிருந்த 130 பில்லியன் ரூபாவை நிலுவையில் வைத்திருந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

கடந்த அரசாங்கம் கடன்களைச் செலுத்த முடியாமற் போயுள்ளன என எங்கேயும் சென்று கூறவில்லை. வட்டியைச் செலுத்தமுடியாதுள்ளது என்றும் கூறவில்லை. பொருளாதார பக்கத்தில் கடந்த அரசாங்கம் சரியான நேரங்களில் கடன்களையும் வட்டிகளையும் செலுத்தி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியது. இப்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்குச் சென்றிருந்தார்.


இந்தியாவுக்குச் சென்ற மஹிந்த ராஜபக்ச, நாடு தற்போது பொருளாதார நெருக்கடியில் உள்ளதால் கடன் செலுத்துவதற்காக கால அவகாசத்தை வழங்குமாறு கோரியிருந்தார்.

பிரதமர் ஒருவர் தனது நாடு பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் கடனை திருப்பிச்செலுத்த கால அவகாசம் கோருவது மிகவும் துரதிஸ்டமான சம்பவமாகும். உலக நாடுகளுக்கு முன்பாக வெட்கமடையும் சந்தர்ப்பமாகும்.என்றார்.

No comments