14 கோடி தங்கம் மீட்பு?


யாழ்ப்பாணத்திலிருந்து மாதகல் கடற்பரப்பு ஊடாக இந்தியாவுக்கு தங்கம் கடத்திச் சென்ற மாதகலைச் சேர்ந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 137 மில்லியன் (13 கோடியே 70 லட்சம் ரூபா) பெறுமதியான 14 கிலோ 300 கிராம் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன என்று கடற்படையினர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மாதகல் கடற்பரப்பில் பயணித்த டிங்கி படகு ஒன்று சோதனைக்குட்படுத்திய போது, 14 கிலோ 300 கிராம் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன.
சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று மாலை ஒப்படைக்கப்படுவர். அவர்களிடம் மீட்கப்பட்ட தங்கமும் சுங்கத் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்படும்” என்று கடற்படையினர் தெரிவித்தனர்

No comments