சோதனைகள் ஏதுமின்றி 20 வருடமாம்?


முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 2000ம் ஆண்டிற்கு முன்னைய இராணுவ நடவடிக்கைகளில் உயிரிழந்தவர்களதாக இருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
 அவை 20 வருடங்கள் பழமையானவை என சட்டவைத்திய நிபுணரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி சட்ட வைத்திய நிபுணரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
எனினும் மரபணு பரிசோதனை ஏதுமின்ற இத்தகவலை எவ்வாறு வைத்திய அதிகாரி வெளியிட்டார் என சந்தேகம் எழுப்பபட்டுள்ளது.

No comments