நானே கொண்டுவந்தேன்:விடாப்பிடி சத்தியலிங்கம்?


ஊழல் குற்றச்சாட்டுக்களில்  பதவியிழந்தவரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் வன்னியில் போட்டியிடவுள்ளவருமான சத்தியலிங்கம் தனக்கு தானே வெள்ளையடிப்பதை தொடர்கின்றார்.

சேப்பா எனும் அமைப்பின் ஊடக முன்னைய மைத்திரி அரசிற்கு நிதி சேகரித்துக்கொடுத்த கதை அம்பலமாக்கப்பட்ட போதும் தானே 1200 கோடி கொண்டு வந்ததாக அவர் புலம்ப தவறுவதேயில்லை.

நெதர்லாந்து நாட்டில் இருந்து பெறப்பட்ட இலங்கை ரூபாக்கள் 1200 கோடி நிதியில் வடக்கு மாகாணத்தில் பாரிய சுகாதார அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இந்த நிதி நான் அமைச்சராக இருந்தபோது பெறப்பட்டு கடந்தவருடம் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வாறே மேலும் எமது மாகாண சுகாதார அபிவிருத்திக்கான மேலதிக நிதியை பெறும் நோக்கில் பின்லாந்து நாட்டிற்கும் திட்டமுன்மொழிவு என்னால் சமர்ப்பிக்கப்பட்டது.

நேற்றயதினம் வவுனியா பொதுவைத்தியசாலையில் நெதர்லாந்து நாட்டு நிதிப்பங்களிப்பில் ஆரம்பிக்கப்பட்ட இருதய சத்திரசிகிச்சைப்பிரிவு மற்றும் சிறுநீரக நோய் சிகிச்சைப்பிரிவு கட்டுமானப்பணிகளை பார்வையிட்டதோடு பின்லாந்து நாட்டு நிதிப்பங்களிப்போடு நடைபெறக்கூடிய கட்டுமானங்களிற்கு பொருத்தமான இடங்களை தெரிவு செய்யும் நோக்கில் அந்நாட்டு கட்டடக்கலை நிபுனர்களோடு களத்தரிசிப்பு நடைபெற்றதாக அவர் தகவல் பகிர்ந்துள்ளார்.

ஆனாலும் அவர் சொன்ன 1200 கோடியில் வடக்கிற்கு வந்தது எவ்வளவு என்பதை அவர் சொல்லவேயில்லை.

No comments