ஆளுநர் தடுத்து நிறுத்திய திருமலை சந்தை?


திருகோணமலை நகரசபை கூட்டமைப்பின் வசமுள்ள போதும் அங்கு எதனை வெட்டிக்கிழிக்க முடியாத டம்மியாகவே அது இருப்பது உறுதியாகியுள்ளது.  திருகோணமலை நகர சபையால் இன்று திறக்கப்படவிருந்த வாராந்த ஞாயிறு சந்தையினை திறக்கவிடாது கிழக்கு ஆளுநர் தடுத்துள்ளார்.

சிங்கள வர்த்தகர்களது எதிர்ப்பினையடுத்தே ஆளுநர் திறக்க தடை விதித்துள்ளார்.

அத்துடன் இன்று திறக்கப்படவிருந்த சந்தையே கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புக்கு அமைய வாராந்த சந்தை உடனடியாக மூடப்பட்டது.அத்துடன் அங்கு வருகை தந்திருந்த வர்த்தகர்களை பொலிசார் வெளியேற்றினர்.

நகர சபை தலைவர், உறுப்பினர்கள் முன்னிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காலை திறந்து வைக்கப்பட்டு வியாபாரம் சூடுபிடித்த நிலையில் வர்த்தகர்களும்,சந்தைக்கு வந்த பொதுமக்களும் ஆளுநரது பணிப்பின் பேரில் பொலிசாரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

கூட்டமைப்பின் தலைவரும்  திருமலையை பிரதிநிதித்துவப்படுத்தும் இரா.சம்பந்தன் கொழும்பிலேயே ஜக்கியமாகிவிட ஒரு சந்தையினை கூட திறக்கமுடியாது நகரசபை கையாலாகாது வேடிக்கை பார்த்துள்ளது.

No comments