தாய்லாந்தை அதிரவைத்த இராணுவ வீரர் சுட்டுக்கொலை

தாய்லாந்து - நஹோக் ரச்சாசிமா பகுதியில் நேற்று (08) மாலை 21 பேரை சுட்டுக் கொன்ற இராணுவ வீரரை 18 மணி நேரத் தேடுதலின் பின்னர் இன்று (09) சற்றுமுன்னர் அந்நாட்டு இராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.

ஜகப்பிரன்த் தொம்மா என்ற இராணுவ வீரரே இந்த கோரத் தாக்குதலை மேற்கொண்டவராவார்.

குறித்த இராணுவ வீரரால் இராணுவ முகாம், பௌத்த விகாரை மற்றும் சொப்பிங் சென்டர் உள்ளிட்ட இடங்களில் இயந்திர துப்பாக்கியால் தாக்குதல் மேற்கொண்டிருந்தது.

இதன்போது இராணுவ கமாண்டர், பொலிஸார் இருவர் உட்பட 21 பேர் பலியாகியதுடன், 41 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நேடி பதிவுகளை பதிவிட்டவாறே இந்த தாக்குதலை கொலையாளியான இராணுவ வீரர் நிகழ்த்தியுள்ளார்.

No comments