புலிகளது புதையல்:படை அதிகாரிகளும் கைது?


விடுதலைப்புலிகளது புதையல்களை தேடுவது மீண்டும் முனைப்பு பெற்றுள்ள நிலையில் படை அதிகாரிகள் சகிதம் இன்று நடைபெற்ற புதையல் தேடுதல் அகப்பட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் முன்னாள் போராளிக்ளது தகவல்களை அடிப்படையாக வைத்து தகவல்கள் பெறப்பட்டு புதையல் தோண்டப்படுவது தொடர்கின்றது.
கிளிநொச்சி தர்மபுரம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில் புதையல் தோன்றுவதற்கு முற்பட்ட 21 பேரை பொலீஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த 21 பேரில் 5 இராணுவ அதிகாரி உட்பட  இராணுவத்தினரும் 13 சிங்களவர்களும் 3 தமிழர்களும் உள்ளடங்குகின்றனர்.

புதையல் தோண்டுவதற்காண பூஜை பொருட்கள் மற்றும் ஸ்கேனர் என பல பொருட்கள் மீட்டுள்ளனர்
குறித்த 21 பேரையும் பொலீஸ் விசேட  அதிரடிப்படையினர் விசாரணைத் தொடர்ந்து  தர்மபுரம் பொலீஸாரிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

No comments