தாய்லாந்தை பதறவிட்ட இராணுவ சிப்பாய்; பலர் பலி!

தாய்லாந்து - நஹோக் ரச்சாசிமா பகுதியில் இன்று (08) மாலை 5.30 மணியளவில் இராணுவ வீரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜகப்பிரன்த் தொம்மா என்ற இராணுவ வீரரே இந்த கோரத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

குறித்த இராணுவ வீரரால் இராணுவ முகாம், பௌத்த விகாரை மற்றும் சொப்பிங் சென்டர் உள்ளிட்ட இடங்களில் இயந்திர துப்பாக்கியால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது இராணுவ கமாண்டர், பொலிஸார் இருவர் உட்பட 12 பேர் பலியாகியுள்ளனர்.

முகநூலில் நேரடி பதிவுகளை பதிவிட்டவாறே இந்த தாக்குதலை கொலையாளியான இராணுவ வீரர் நிகழ்த்தியுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட இராணுவ வீரர் தனது துப்பாக்கியை கைவிட்டு தப்பியோடியுள்ளார்.

அவரை கைது செய்ய பொலிஸார், இராணுவத்தினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

No comments