தமிழருக்கு நீதி, சமத்துவம் வேண்டும் - மோடி

இலங்கையில் தமிழர்களின் பிரச்சினை திறந்த மனதுடன் ஆராயப்பட்டு அவர்களுக்கு நீதி, சமத்துவம், சமாதானம் கிடைக்க வேண்டுமென்ற இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இன்று (08) சந்தித்தபோது இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

மூன்று நாள் இந்திய விஜயத்தை மேற்கொண்டுள்ள மஹிந்தவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி இதனை தெரிவித்தார். மேலும்,

தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது குறித்து நாம் பேச்சு நடத்தினோம். தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அவர்களின் பிரச்சினை திறந்த மனதுடன் பேசப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தினேன்.

ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கு நீதி, சமத்துவம், சமாதானம் வழங்கப்பட வேண்டுமென்பது எமது நிலைப்பாடு. அதை இலங்கை அரசும் புரிந்து கொள்ளுமென நாம் நம்புகிறோம்.

இருநாட்டு மீனவர் பிரச்சினையில் மனிதநேய அடிப்படையில் செயற்படுவதென இணக்கம் காணப்பட்டது. - என்றார்.

No comments