தூசு தட்டப்படும் வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம்?


பெரும் பிரச்சாரங்களுடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மற்றும் முன்னாள் ஆளுநர் சுரேன் இராகவன் ஆகியோர் பெரும்பிரச்சாரங்களுடன் முன்னெடுக்கப்பட்ட யாழ்ப்பாண தீபகற்பத்திற்கான புதிய குடிநீர் திட்டமான வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம்(கப்பூதூ திட்டம் ) புதிய அரசினால் தூசு தட்டப்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த முன்மொழிவுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று கடந்த 7ம் திகதி பராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.

மேலும் யாழ் குடாநாட்டில் வசிக்கும் சுமார் 630,000 மக்களின் குடிநீர் தேவையினை பூர்த்திசெய்யும் முகமாக பொறியியலாளர் குகனேஸ்வரராஜா அவர்களினால் முன்மொழியபட்டு அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டு இதுவரையும் ஆரம்பிக்கப்படாமல் இருக்கும்'வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம்' பற்றி முக்கிய கவனம் செலுத்தபட்டது.

இதன் மொத்த கொள்ளளவாக 18.25 மில்லியன் கன அடி மற்றும் இதற்காக ரூ15,000 மில்லியன் மொத்த மதிப்பீடாகும்.

'யாழ்ப்பாணத்திற்கு குடிநீர்' என்ற திட்ட முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, இந்த திட்டத்தை விரைவில் தொடங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டதாக தெரியவருகின்றது.

No comments