மாணவர்களிற்காக குரல் கொடுக்கும் முன்னாள் கொலையாளி?


யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் ஒருசில அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுவதாக கடந்த காலங்களில் மாணவர்களை கடத்தி படுகொலைகளை செய்ததாக அடையாளப்படுத்தப்பட்ட டெலோ பிரமுகர் ஜனார்த்தன் என்பவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் தவறிழைத்த மாணவர்களை சட்டத்தின் முன்னிறுத்துவதற்கு மாணவர் ஒன்றியம் முன்வர வேண்டும். எதிர்வரும் காலத்தில் நாம் தொடர்ந்து அவதானித்துக் கொண்டிருப்போம். இவ்வாறான செயற்பாடுகளை நாம் மேலும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் திருவாய் மலர்ந்துள்ளார்.

புதிதாக முளைத்துள்ள சிறீகாந்தாவின் தமிழ்த் தேசியக் கட்சியின் பிரசார செயலாளர் ஐனார்த்தனன் மேலும் தெரிவிக்கையில் பல்கலைக்கழக வளாகத்தினுள் இடம்பெறும் ராக்கிங் எனப்படும் பகிடிவதையானது வரைமுறையற்ற வகையில் பாலியல் துன்பறுத்தலாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் விடயம் அங்கீகரிக்கக் கூடியது அல்ல.

தமிழ்த் தேசிய இனத்தின் அபிலாசைகளுக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கும் கட்சி எனும் வகையில் எமது சமூகத்தின் நல்லொழுக்கம் மற்றும் விழுமியங்கள் தொடர்பில் அக்கறை மிக்கவர்களாக செயற்படுவது எமது கடமையாகும்.

ஆகவே வட மாகாணத்திற்கான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இவ்விடயம் தொடர்பில் தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் பல்கலைக்கழக சமூகத்தினர் பகிடிவதையை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்விடயம் தொடர்பில் இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டிருக்காது விடின் எமது கட்சியின் சார்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு தயாராக உள்ளோம் எனவும் தனது ஆதரவாளர்களிடையே தெரிவித்துள்ளார்.

No comments