கடத்தல் தளபதிக்கு மீண்டும் அழைப்பாணை

தமிழர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கில் ஆஜராகுமாறு முன்னாள் கடற்படை தளபதி (அட்மிரல் ஒப் த ப்ளீட்) வசந்த கரன்னகொடவுக்கு மூன்றாவது முறையாக நிரந்தர மேல் நீதிமன்றின் ட்ரயல் அட்-பார் ஆஜம் இன்று (07) அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் முக்கிய சந்தேக நபர்களான முன்னாள் கடற்படை தளபதிகள் வசந்த கரன்னகொட மற்றும் ரியர் அட்மிரல் டிகேபி.தஸாநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்குகளை இடைநிறுத்துமாறு கடந்த அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு ஜனவரி (27) அறிவித்திருந்தது.

அவ்வாறு தமக்கு அறிவுறுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சட்டமா அதிபர் அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே கடந்த இரண்டு முறை விடுத்த அழைப்பாணைகளை புறக்கணித்த வசந்த கரன்னகொடவுக்கு மீள அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

No comments