தற்கொலைகளின் நகரமாக யாழ்ப்பாணம்? இன்றும் ஒருவர்

ஒரு பிள்ளையின் தாய் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் இன்று (08) யாழ்ப்பாணம் – அரியாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அரியாலை இராஜேஸ்வரி வீதியில் வசித்துவந்த நகுலேஸ்வரன் நிரோஜினி (31-வயது) எனும் ஒரு பிள்ளையின் தாயாரே இன்றைய தினம் (08) வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

கணவரும், தாயாரும் வேலைக்காக சென்றுவிட மகன் கல்வி நிலையத்திற்கு சென்றிருந்த சமையத்தில் குறித்த பெண் தனித்திருந்த சமையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments