முல்லையில் வெடிப்பு:ஒருவர் படுகாயம்?


முல்லைத்தீவு, சிலாவத்தை மாதிரிக்கிராமத்தில் இடம்பெற்ற வெடிப்புச்சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த வெடிப்பு இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிலையில் படுகாயமடைந்தவர் ஒரு காலை முற்றாக இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இரும்பு வியாபாரம் செய்யும் சூசைப்பிள்ளை புலேந்திரன் (வயது-42) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்தவர் இரும்பு வியாபாரம் செய்பவர் எனவும் இதற்காக சேகரிக்கப்பட்ட பொருட்களை அவர் பிரித்தெடுக்க முயற்சித்தபோதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

No comments