மத்திய வங்கி கட்டடத்தில் இருந்து குதித்த சிறுவன் பலி?

இலங்கை மத்திய வங்கி தலைமையகக் கட்டடத்தில் இருந்து குதித்து 16 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

இன்று (25) மாலை குறித்த சிறுவன் வங்கியின் கட்டடத்தின் 6வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளான்.

மத்திய வங்கியின் மூத்த அதிகாரி ஒருவரது மகனான குறித்த சிறுவன் மாடியில் இருந்து குதித்து தற்காெலை செய்து காெண்டதாக ஆரம்ப விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோட்டை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

No comments