திமுக பொதுச்செயலாளர் கோமா நிலையில், கவலைக்கிடம்!

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று (பிப்ரவரி 24) அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேராசிரியர் அன்பழகனை நேற்றும்,இன்றும் திமுக தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். அப்போது அவரிடம் மருத்துவர்கள் அன்பழகனுக்கு செயற்கை சுவாசக் கருவி வைத்திருப்பதாகவும், நேற்று இரவு முதல் கண் திறக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் மருத்துவமனைக்கு திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அவசரமாக விரைந்து சென்று கொண்டிருக்கிறனர்.

பேராசிரியர் அன்பழகன் நினைவு தப்பிய நிலையில் கோமா நிலைக்கு சென்றிருப்பதாகவும், தொடர் கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கவலை அடைந்து காணப்படுகின்றனர்.

No comments