கோத்தா சிபார்சில் இடமாற்றம்?


முன்னைய மைத்திரி அரசினால் இழுத்தடிக்கப்பட்ட பொலிஸ் இடமாற்றங்கள் அமுலுக்கு வரத்தொடங்கியுள்ளது.அவ்வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சில  பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் சிபார்சுடன் இவ்விடமாற்றங்கள் செய்யப்படவுள்ளது.

சேவையின் அவசியம் கருதி 14 பேர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர், பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் ஆறு பேர் பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் இருவர் ஆகியோரே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments