தொடங்கியது தேர்தல் பந்தாட்டம்?


நாடாளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து அதிகாரிகளை பந்தாட அரசு தொடங்கியுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தின் புதிய அரச அதிபராக நிர்வாக சேவை அதிகாரி த.கேசவனை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய அரசாங்க அதிபர் ந.வேதநாயகன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற இன்னும் சில மாதங்களே உள்ளன.

ஓய்வுபெறவுள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்வதில்லையென்ற புறநடையினை தாண்டி தற்போது அவரை அரச திணைக்களம் ஒன்றுக்கு இடமாற்றம் செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்கவை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக அங்கு அரச அதிபராக கடமைபுரிந்த புஸ்பகுமார சேவையிலிருந்து ஓய்வுபெற்று சென்றதையடுத்து மேலதிக அரச அதிபர் அருந்தவராஜா பதில் அரச அதிபராக கடமையாற்றிவருகிறார் .

No comments